வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை · FETNA
39ஆவது பேரவை தமிழ் விழா · 2026
விழா மலர் 2026
தாயகம் கடந்தும் தமிழ் மொழி வளர்ப்போம்
✦ படைப்புகள் வரவேற்கப்படுகின்றன ✦
📅 சூலை 2–4, 2026
📍 எடிசன், நியூ செர்சி
🏆 39ஆவது தமிழ் விழா
🔬
அறிவியலும் தமிழும்
அறிவியல் புனைக்கதை
தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு சார்ந்த அறிவியல் புனைக்கதை
தமிழ் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புக்கள்
பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை: தமிழ் அறிவியலாளர்கள்
( திருமூலர் … சர் சி.வி. ராமன் … டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் … )
அறிவியலுடன் பயணிக்கும் தமிழ்
அறிவியலைத் தழுவும் தமிழின் எதிர்காலம் – ஒரு முன்னோட்டம்
👑
சோழரும் தமிழும்
இன்றைய உலகில் சோழர்களின் பாரம்பரியமும் அதன் முக்கியத்துவமும்
சோழர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
சோழர் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கதை
சோழர் பெருமையைச் சொல்லும் ஒரு கதை / சோழர் காலத்தை உயிர்ப்பிக்கும் ஒரு கதை
🤖
நிகழ்கால நிகழ்வுகள்
செயற்கை நுண்ணறிவும் எதிர்கால மனிதச் சமூகமும்
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத் தாக்கங்கள்
பெருந்தொற்றுக்கு (கோவிட்) முன்பும் பின்பும்
சமூக மற்றும் உலக மாற்றங்கள்
🌟
காலத்தின் கண்ணோட்டம்
2025 – நினைவுகளின் வழியே ஒரு பயணம்
2025 – எதிரொலி
2026 – நாளை நோக்கிய பயணம்
முன்னோக்கியச் சிந்தனை
அறிவியலுடன் இணைந்து முன்னேறும் தமிழ்
அறிவியலின் புதிய சொற்களுடன் தமிழின் முன்னேற்றப் பாதை
✍️
இலக்கியம்
புதுக்கவிதை / மரபுக் கவிதை
ஒரு பக்கத்திற்கு மிகாமல்
📋
படைப்பு விதிமுறைகள்
  • கதை, கவிதை, கட்டுரை முதலான படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும்.
  • படைப்புகள் முன்னெப்போதும் வெளியிடப்படாத, தனித்தன்மை வாய்ந்தவையாகவும், பேரவையின் 39ஆவது விழாமலருக்காகத் தயாரிக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும்.
  • படைப்புகள் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விழாவின் கருப்பொருளான “தாயகம் கடந்தும் தமிழ் மொழி வளர்ப்போம்” என்பதை மையமாகக் கொண்ட படைப்புகளுக்கும், வட அமெரிக்கச் சூழலை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
  • படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்துச் செறிவோடும் கல்வித் தரத்தோடும் அமைந்திருக்க வேண்டும்.
  • 1250 சொற்களுக்கு மிகாமல் இருக்கும் முழுப் பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • படைப்புகள் எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவதூறு அல்லது அநாகரிகமான கருத்துக்களையோ கொண்டிருக்கக் கூடாது.
📨
அனுப்பும் முறை
  • அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வழியாக vizhamalar@fetna.org என்ற முகவரிக்கு Microsoft Word கோப்பாக ஒருங்குறி எழுத்துரு (Unicode) வடிவில் அனுப்பப்பட வேண்டும்.
  • தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் ஆகியவை JPG கோப்பாக இருக்க வேண்டும்.
  • PDF கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
📅
கால வரையறை
  • அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 14, 2026 அன்று அல்லது அதற்கு முன் வந்து சேர வேண்டும்.
  • காலக்கெடு முடிந்த பின்னர் அனுப்பப்படும் படைப்புகள் மலரில் சேர்க்கப்படமாட்டாது.
✏️
ஆசிரியர் குழு
  • படைப்புகளைத் திருத்தவோ அல்லது நீக்கவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
  • ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
👤
படைப்புடன் சேர்த்து அனுப்ப வேண்டிய தகவல்கள்
📛 தமிழில் முழுப் பெயர்
📧 மின்னஞ்சல் முகவரி
📞 தொலைபேசி எண்
🌍 நாட்டின் பெயர்
🖼️ வண்ணப் புகைப்படம் (வெற்றுப் பின்னணி)
உங்கள் படைப்பை இன்றே அனுப்புங்கள்!
அறிவிப்பு தொடர்பான கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
கடைசி நாள்
ஏப்ரல் 14, 2026

✉ vizhamalar@fetna.org