விழாக் குழுக்கள் மற்றும் அவற்றின் பணிகள்

பொதுப்பணிகள் குழு (Adhoc Committee)

பொதுப்பணிகள் குழு – சூழலுக்குத் தேவையான பணிகளைச் செய்வது, ஒருங்கிணைப்பாளருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யும் பொதுவானதொரு குழு
 
Supports coordinators by handling tasks that fall outside the scope of other committees.

ஒலி-ஒளிக் குழு (AV Committee)

நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஒலி/ஒளி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் குழு. இந்தக் குழுவில் சேரும் தன்னார்வலர்களுக்கு ஒலி/ஒளி அமைப்புகள் குறித்த அடிப்படைத் தொழில்நுட்ப அறிவோ அல்லது அதனை கற்றுக்கொள்ளும் ஆர்வமோ இருக்க வேண்டும்.
 
AV Committee – This key committee manages all audio and lighting requirements for the programs. Volunteers for this team should have basic technical knowledge of A/V systems or a willingness to learn the necessary skills.

முதலுதவி, தொடர் மருத்துவக் கல்விக் குழு (CME & First Aid Committee)

உள்ளூர் மருத்துவர் தலைமையில், தொடர் மருத்துவம் குறித்தான நிகழ்ச்சியை மருத்துவர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்துச் செய்தல் மற்றும் விழாவில் முதலுதவி மற்றும் அவசர மருத்துவ உதவிகளை நிர்வகிக்கும் குழு.
 
Led by a local physician, this committee organizes Continuing Medical Education (CME) sessions and manages first aid services, including on-site medical support and emergency care.

போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு (Competition Committee)

குறள் தேனீ, தமிழ்த்தேனீ, கலைத் தேனீ போன்ற அனைத்து போட்டிகளையும் ஒருங்கிணைத்து, அவை சீராக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யும் குழு.
 
Responsible for coordinating all competitions such as Kural Theni, Tamil Theni etc., and ensuring all necessary arrangements are in place for their smooth execution.

அலங்காரக் குழு (Decorations Committee)

பேரவை விழாவின் அலங்காரங்களைத் திட்டமிட்டு, வடிவமைத்து அமைப்பதற்குப் பொறுப்பேற்கும் குழு.
 
Responsible for planning, designing, and installing decorations across all convention venues.

முகாமைத்துவக் குழு (Event Day Management Committee)

வரிசைகள், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, கூட்ட மேலாண்மை, உடனடி உதவிகள் மற்றும் நிகழ்ச்சியின் பொழுது ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துதல்.
 
Responsible for managing queues, ensuring smooth crowd movement, providing immediate assistance, and maintaining order during the event.

திரைப்பட விழாக் குழு (Film Festival Committee)

பேரவையின் சர்வதேச திரைப்பட விழாவுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, நிர்வகிக்கும் குழு
 
Dedicated to planning, coordinating, and managing all activities related to FeTNA’s International Film Festival.

பேரவை பன்னாட்டு தமிழ் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN)

தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டினை ஒருங்கிணைத்தல்
 
Coordinating Tamil Entrepreneurial Conference activities

உணவுக் குழு (Food Committee)

பேரவை விழாவின் பங்கேற்பாளர்கள், விருந்தினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான உணவு, சிற்றுண்டி, தேநீர், தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை நிர்வகித்தல்.
 
Managing food, snacks, beverages, and related arrangements for convention participants, guests, and volunteers.

விருந்தோம்பல் குழு (Hospitality Committee)

நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்களின் வரவேற்புப் பணிகளையும், பங்கேற்பாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான உதவிகளையும் ஒருங்கிணைத்தல்.
 
Managing reception duties such as registration desks, front desks, and providing assistance to participants and guests throughout the event.

விடுதி முன்பதிவு ஒழுங்கமைப்புக் குழு (Hotel Reservation Committee)

விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான விடுதிகளை முன்பதிவு செய்தல், அறை ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவை சார்ந்த அனைத்தையும் ஒருங்கிணைக்கும் குழு.
 
Handles hotel bookings, room allocations, and accommodation management for guests, participants, and dignitaries.

இலக்கிய வினாடி வினா குழு (Literature Quiz Committee)

தமிழ் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துதல்.
 
Organizing and coordinating the Tamil Literature Quiz event.

இணையமர்வுக் குழு (Parallel Sessions Committee)

இணை அமர்வுகளை திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைத்தல்
 
Managing and coordinating parallel sessions

மக்கள் தொடர்பு, விளம்பரக் குழு (Public Relations & Marketing Committee)

விழா குறித்தான விளம்பரங்கள், ஊடகங்கள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளை மேலாண்மை செய்து செயல்படுத்துதல்.
 
Managing and Executing Advertisements, Media, and Related Activities.

பாராட்டுக் குழு (Recognition Committee)

சிறப்பு விருந்தினர்கள், தன்னார்வலர்கள், பங்கேற்பாளர்கள், குழந்தைகள் மற்றும் விழாவிற்கு பங்களிக்கும் அனைவருக்கும் உரிய பாராட்டும் அங்கீகாரமும் வழங்குவதை உறுதி செய்யும் குழு.
 
Ensures proper recognition and appreciation for chief guests, volunteers, participants, children, and others contributing to the event.

பதிவுக்குழு (Registration Committee)

விழாவிற்கான நுழைவுப்பதிவுகளை மேலாண்மை செய்து, தொழில்நுட்பம், உணவு, தங்குமிடம் மற்றும் பிற குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
 
Overseeing event ticketing and coordinating with the Tech, Food, Accommodation, and other committees to ensure smooth operations.

சங்கங்களின் சங்கமம் குழு (Sangangalin Sangamam Committee)

தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பேரவை விழாவில் செயல்படுத்துதல்.
 
Coordinating with Tamil Sangams to plan and execute the Sangangalin Sangamam program at the FeTNA event.

தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பு குழு (Tamil Sangam Outreach Committee)

தமிழ்ச் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிகளை கொண்டு வரவும், வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்கவும் செயற்படுதல்.
 
Engaging with Tamil Sangams to bring quality programs and foster strong collaboration for the event.

தமிழ்ப் பள்ளிகள் ஒருங்கிணைப்புக் குழு (Tamil Schools Committee)

மாணவர்களின் பங்கேற்பு, நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்க்கல்விச் செயல்பாடுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க தமிழ் பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் குழு.
 
Collaborates with Tamil schools to plan, organize, and coordinate student participation, performances, and educational activities for the event.

தொழில்நுட்பக் குழு (Tech Committee)

இணையத்தளம், காட்சி ஊடகம், நிகழ்ச்சித் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பத் தேவைகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் குழு.
 
Responsible for managing all technical aspects of the event, including website, digital displays, event technology, and other tech requirements for smooth execution.

சுற்றுலாப் பயணக் குழு (Tourism Committee)

சிறப்பு விருந்தினர்களுக்காக நியூ செர்சி, நியூயார்க் பகுதிகளில் உள்ளூர் சுற்றுலா பயணங்களை ஒருங்கிணைக்கும் குழு.
 
Organizes local sightseeing trips for chief guests around New Jersey and New York.

மரபுக்கலைக் குழு (Traditional Arts Committee)

தமிழ் பாரம்பரிய நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தல்.
 
Planning and coordinating Tamil traditional performances, folk arts, and cultural activities.

போக்குவரத்துக் குழு (Transportation Committee)

விழாவிற்கான அனைத்து போக்குவரத்து தேவைகளையும், சிறப்பு விருந்தினர்கள் வருகை, புறப்படும் ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து நிர்வகித்தல்.
 
Coordinating and managing all transportation needs for the event, including guest pick-up, drop-off, and travel logistics.

விற்பனையாளர் ஒருங்கிணைப்புக்குழு (Vendor Stalls Committee)

சிறு தொழில் விற்பனையாளர்களை இணைத்து, விழாவில் அவர்களின் விற்பனை மையங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அது சார்ந்த ஏற்பாடுகளைச் செய்தல்.
 
Coordinating with small business vendors to bring them on board, manage booth setup, and handle logistics for their participation in the convention.

காட்சி ஊடகக் குழு (Visual Media Committee)

நிகழ்ச்சிக்கான புகைப்படம் மற்றும் காணொளி காட்சிகளைத் திட்டமிட்டு, தரமான காட்சி ஆவணப்படுத்தலை உறுதி செய்வது.
 
Responsible for planning and managing all photography and videography needs for the event, ensuring high-quality visual coverage and documentation.

இளைஞர் குழு (Youth Committee)

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் பங்கேற்பை ஊக்குவித்து, தமிழ் சங்கங்களின் இளைஞர் குழுக்களுடன் இணைந்து இளைஞர் சார்ந்த நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்துதல்.
 
Engages with college and school students to raise awareness about the event, encourages their participation, and collaborates with youth leaders from Tamil Sangams to plan and conduct youth-focused activities.