விழா மலர் 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
38ஆவது ஆண்டுவிழா மலர் – 2025
விழாமலருக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன!

வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ்த்திருவிழா, எதிர்வரும் சூலை 3, 4, 5 (07/03/2025 – 07/05/2025) ஆகிய நாள்களில், வட கரொலைனாவில் உள்ள ராலே(Raleigh) நகரில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவின் நினைவுப் பரிசாக கிடைக்கப் பெறவிருக்கின்ற விழாமலருக்காக, தங்களது படைப்புகள் உவப்புடன் வரவேற்கப்படுகின்றன.

தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தோழர் இரா.நல்லகண்ணு
நூற்றாண்டு விழா

பரிந்துரைக்கப்படும் தலைப்புகள்
  •  குறளும் குன்றக்குடி அடிகளும்
  • குன்றக்குடி தந்த தமிழ்ச்செம்மல்
  • குன்றக்குடி அடிகளார் – சமய சமுதாய இணைப்புப் பாலம்
  • தோழர் நல்லகண்ணு – ஓய்வறியா உரிமைக்குரல்
  • எண்ணித்துணிந்த ஏற்றமிகு தோழர் நல்லகண்ணு
  • பரிசு நோக்கா பைந்தமிழ்த் தோழர் நல்லகண்ணு
  • தமிழரின் அறிவியல் பங்களிப்பு
  • தமிழரின் தொல்வணிகமும் பொருளாதாரமும்
  • வள்ளலாரும் தமிழரின் மறுமலர்ச்சியும்
  • குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க எளிய வழிமுறைகள்
  • தொழில் முனைவோர் – வட அமெரிக்க அனுபவங்கள்
  • வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வாயிலாகப் பயன் பெற்ற அனுபவம்
  • தமிழிசையும் கூத்தும்
  • தமிழால் இணைவதால், வட அமெரிக்காவில் வாழும் பதின்ம வயதினருக்கு என்ன பயன்?
  • தமிழும் மருத்துவமும்
  • வட அமெரிக்க வாழ்க்கைக்குச் சங்கத்தமிழிலிருந்து பாடங்கள்
படைப்பு விதிமுறைகள்
  • கதை, கவிதை, கட்டுரை முதலான படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும்.
  • படைப்புகள் முன்னெப்போதும் வெளியிடப்படாத, தனித்தன்மை வாய்ந்த, பேரவையின் 38ஆவது மலருக்கான படைப்பாக இருக்கவேண்டும்
  • படைப்புகள் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • விழாவின் கருப்பொருளை (தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம் ) மையமாகக் கொண்டிருக்கும் படைப்புகளுக்கும், வட அமெரிக்கச் சூழலைத் தளமாகக் கொண்ட படைப்புகளுக்கும் முன்னுரிமை தரப்படும்.
  • படைப்புகள், பொருள் பொதிந்தவையாகவும் கருத்துச் செறிவோடும் கல்வித் தரத்தோடும் இருத்தல் வேண்டும்.
  • 1250 சொற்களுக்கு மிகாமல் இருக்கும் முழுப்பக்க படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
  • படைப்புகள் எவ்விதத்திலும் தவறான கருத்துகளையோ, அவதூறு அநாகரிகத்தையோ வெளிப்படுத்துதல் ஆகாது.
  • அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வழியாக vizhamalar@fetna.org எனும் முகவரிக்கு Microsoft Word கோப்பாக அனுப்பப்பட வேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் அனைத்தும் JPG கோப்பாக இருத்தல் வேண்டும்.
  • PDF கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கால வரையறை:
  • அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 14, 2025ஆம் நாளுக்கு முன்னர் வந்து சேரல் வேண்டும்.
  • கெடு முடிந்த பின்னர் அனுப்பப்படும் படைப்பு, மலரில் சேர்க்கப்படமாட்டாது.
  • படைப்பைத் திருத்தவோ / நீக்கவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
  • ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
படைப்புக் கோப்புடன் கீழ்க்கண்ட தகவல்களையும் அனுப்பவும்:
  • தமிழில் தங்களின் முழுப் பெயர்
  • மின்னஞ்சல் முகவரி
  • தொலைபேசி எண்
  • நாட்டின் பெயர்
  • தங்களின் சிறிய அளவிலான வெற்றுப் பின்னணியுடன் கூடிய வண்ணப் புகைப்படம்
அறிவிப்பு குறித்த வினாக்கள், கூடுதல் தகவலுக்கு, மின்னஞ்சல் வாயிலாக vizhamalar@fetna.org எனும் முகவரியில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.