பேரவை விழா 2025: விளையாட்டுத் திருவிழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா, தமிழ்த்திருவிழா , எதிர்வரும் ஜூலை 3, 4 & 5 ஆகிய நாள்களில், வட கேரொலைனா மாகாணம் இராலே நகரில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகின்றோம். விழாவின் ஒரு பகுதியாக, ஜூலை 4 அன்று, விளையாட்டுத் திருவிழாவும் இடம் பெறவுள்ளது.
விளையாட்டு! விடாமுயற்சி!! விண்முட்டும் வெற்றி!!!
முதலாவது பேரவை உலக விளையாட்டுப் போட்டிகள்:
- ஆடவர் / இருபாலர் உள்ளரங்குக் கைப்பந்து(indoor Volleyball – Men/Mixed)
- நடைப்போட்டி (Walkathon)
- குறுந்தொடர் ஓட்டம் (Mini Marathon)
- பெண்டிருக்கான எறிபந்து (Throwball)
ஆகிய உள்ளரங்கப் போட்டிகளில் பங்கேற்று உங்கள் சாதனைகளைப் பறைசாற்ற ஓர் அரிய வாய்ப்பு. இன்றே பயிற்சியைத் தொடர்ந்திடுவீர்! விளையாட்டுகளில் பதிவு செய்வதற்கான விபரங்களுக்குக் கவனித்திருப்பீர்!
தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்!
பேரவை விழாவில் கலந்துறவாடுவோம்!!